கிளிநொச்சியில் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: களத்திற்கு சென்ற சுமந்திரன் (Photos)
கிளிநொச்சி பொண்ணா வெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார்.
சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 84 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை சென்று அந்த மக்களுடன் சந்தித்து கலந்துரையாடியதுடன் சுன்னக்கல் அகழ்வு மேற்கொள்வதாக குறிப்பிடப்படும் பிரதேசங்களையும் சென்று பார்வையிட்டுள்ளார் இவ்வாறு பார்வையிட்ட எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சீனாவின் கப்பல் மற்றும் ஆய்வுகள் தொடர்பில் நாங்கள் நீண்ட காலமாகவே குறிப்பிட்டு வருகின்றோம். இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கின்றது அதுவும் இந்தியாவுக்கு 30 கிலோமீட்டர் அண்மையிலே அமைந்திருக்கிறது.
கட்சியினுடைய மாநாடு
இதே இலங்கை தென் சீன கடற் பகுதியில் அமைந்திருக்குமாக இருந்தால் இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கலாம் இலங்கை இருப்பது தென் சீன கடலில் அல்ல இந்து மா சமுத்திரத்தில் ஆகவே அதனுடைய பாதுகாப்பு தொடர்பிலும் இந்தியாவிற்கு அதன் பாதுகாப்பு தொடர்பில் கரிசனைகள் இருக்கின்றது என்பதனை சீனா இலங்கை என்பன ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை தமிழரசு கட்சியின் சீரமைப்பு தொடர்பில் கட்சியினுடைய மாநாடு எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதில் கட்சி கூடி ஆலோசனைகளை பெற்று ஆராய்ந்து முடிவெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.