இஸ்ரேலால் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிராக புத்தளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் (Photos)
பலஸ்தீன் காஸா மக்களுக்கு எதிராக இஸ்ரேலியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் இனப்படுகொலை என்பவற்றை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (17.11.2023) ஜும் ஆத் தொழுகையின் பின் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புத்தளம் ஜம்மியத்துல் உலமா, புத்தளம் பெரியபள்ளி நிர்வாகம், அரசியல் தலைமைகள் மற்றும் பலஸ்தீன சுதந்திரத்திற்கான புத்தளம் மாவட்ட அமைப்பினர் ஆகியோர் ஒன்றிணைந்து குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
மௌன அஞ்சலி
குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் புத்தளம் பெரிய பள்ளிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு, பேரணியாக புத்தளம் கொழும்பு முகத்திடலைச் சென்றடைந்துள்ளது.
இதன்போது பலஸ்தீனிய கொடிகளை ஏந்தியவாறும் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பிவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இஸ்ரேலியர்களினால் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த பலஸ்தீன மக்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலியும் துஆப் பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





உக்ரைனுக்கு நேட்டோ பாணியிலான பாதுகாப்பு: முன்மொழிவை ஒப்புக் கொண்ட புடின்! ஜெலென்ஸ்கி வரவேற்பு News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
