கோட்டாபயவின் வாகனத்தை இடைமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!! திசைதிருப்பும் முயற்சி?
கிளாஸ்கோவில் இருந்து காலநிலை மாநாடு நடைபெறும் இடத்திற்குச் சென்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாயவின் வாகனம் என்று கூறப்பட்ட ஒரு வாகனத்தை தமிழ் மக்கள் இடைமறித்த நிகழ்வானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கிளாஸ்கோ நகரின் Dunblane , Hydro Perth Rd இலுள்ள Hilton Hotel இனை இன்று அதிகாலை முதல் சூழ்ந்துகொண்ட புலம்பெயர் தமிழர்கள், தொடர்ச்சியாக ஆர்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டலில் இருந்து கோத்தபாய வாகனம் ஒன்றில் பயணிப்பதான தோற்றப்பாடு ஏற்படுத்தப்பட்தைத் தொடர்ந்து, அந்த வாகனத்தை இடைமறித்து கோசங்களை எழுப்ப ஆரம்பித்தனர் ஆர்பாட்டக்காரர்கள். அதனைத் தொடர்ந்து அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டதுடன், காவல்துறையினரும் பெரும் அளவில் குறிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால் அது ஒரு திசைதிருப்பும முயற்சி என்று பின்னர் தெரியவந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சிர்செய்தற்கான ஒரு ஒத்திகையாக அது இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.



துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri