மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு: மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் (Photos)
மின்கட்டண அதிகரிப்பை கண்டித்து மட்டக்களப்பில் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டம் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர் தர்மரெட்ணம் தயானத்தன் தலைமையில் இன்றையதினம் (25.10.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்புக்கு எதிராக கோஷங்கள்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, மின்கட்டணத்தை கூட்டாதே, ரணில் ராஜபாக்சவை கண்டிக்கின்றோம்” என்கின்ற கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பிரதம அமைப்பாளர் அல்ஹாஜ் முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பிரான்சிஸ் மகேந்திரன், கட்சியின் உறுப்பினர்கள், கிராமமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்- சசிகரன்