கிளிநொச்சி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் (photos)
கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் கிராம மக்களும், அப்பிரதேச மக்கள் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இன்று (03.08.2023) இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப கட்ட பணிகளுக்கு எதிர்ப்பு

பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் சீமெந்து தொழிற்சாலைகிகான கல் அகழ்வு பணிகள் மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், விவசாய நிலங்களை அழிக்காதே, ஏழை மக்களின் வளங்களை சுரண்டி பிழைக்காதே, சுன்னக்கல் அகழ்வு வேண்டாம், டோக்கியோ சீமெந்து கம்பனியே வெளியேறு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், கோசங்களையும் எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |



தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri