பொலிகண்டி வரையான வழக்கு விசாரணையை முற்றாக இடை நிறுத்துமாறு நீதவான் உத்தரவு

Srilanka Court Polikandi Pothuvil
By Kumar Apr 30, 2021 10:02 PM GMT
Report

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் நீதிமன்ற தடையுத்தரவினை மீறியுள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை முற்றாக இடைநிறுத்துமாறு இன்று வெள்ளிக்கிழமை (30) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ.என் றிஸ்வான் கட்டளை பிறப்பித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. இருப்பினும் மேற்படி பேரணியில் நீதிமன்றத் தடையுத்தரவினையும் மீறிச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கருணாகரம், த.கலையரசன், இரா.சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவைத் தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை இன்று 30 ஆந் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த வழக்கின் மீதான விசாரணை இன்றைய தினம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளின் சமர்ப்பணத்தின் அடிப்படையில் குறித்த வழக்கினை முற்றாக இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு முதல்நாள் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவினைப் பெற்றிருந்தார்கள். அதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு இந்தப் பேரணியில் கலந்து கொள்பவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்ற உத்தரவு தான் கொடுக்கப்பட்டிருந்தது. அப்படியான உத்தரவு வழங்கப்பட்டிருந்த வேளையில் அப்பேரணி கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தினூடாகச் செல்லும் போது எவருக்கும் எவ்வித பாதிப்புகளும், சுகாதார பாதிப்புகளும் ஏற்படாத வண்ணமே செயற்பட்டார்கள்.

அதன் பிற்பாடு கல்முனைப் பொலிஸார் நிதிமன்றத்திலே வேறு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்து ஏழு பேரின் பெயர்களைக் கொடுத்து அவர்கள் 02ம் திகதி கொடுக்கப்பட்ட  நீதிமன்றத் தடையுத்தரவினை மீறிச் செயற்பட்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு நீதிமன்ற அழைப்பாணை கொடுக்கப்பட வேண்டும் என்று நீதவான் இல்லாத சமயத்தில் பதில் நீதவானிடத்தில் இருந்து அந்த அழைப்பாணையைப் பெற்றிருக்கின்றார்கள்.

நீதவான் நீதிமன்றத்திற்கு இவ்வழக்கினை விசாரிப்பதற்கு எவ்வித நியாயாதிக்கமும் இல்லை. எனவே நேற்றைய தினம் இவ்வழக்கிற்கு எதிராக ஆட்சேபனை மனுவினை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்ததன் அடிப்படையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் நீதிமன்ற தடையுத்தரவினை மீறியுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் கல்முனை நீதவான் நீதிமன்றம் நடவடிக்கைகளை இடை நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்திருந்தது.

இக்கட்டளையானது பிரதிவாதிகளின் பிரசன்னம் இல்லாமல் கொடுக்கப்பட்ட கட்டளை என்பதால் மே 18ம் திகதி வரை அழுலில் இருக்கும் அதன் பின்னர் பிரதிவாதிகளின் பிரசன்னத்தின் பின் அது நீடிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கொடுக்கப்பட்ட தடையுத்தரவு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதமன்றப் பதிவாளரூடாகக் கல்முனை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசியில் அறிவிக்கப்பட்டு இன்று காலை அது தொலைநகலில் அனுப்பி வைக்கப்பட்டும் இருக்கின்றது.

அதனடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் எமுவர் சார்பில் நான் மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி பேரின்பராஜா உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தோம். இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணி தொடர்பில் பொலிஸாரினால் பெறப்பட்ட தடையுத்தரவை மீறி எவரும் செயற்பட்டதாகத் தெரியவில்லை என்றும், அவ்வாறு மீறப்பட்டதாக இருக்கும் விடயங்கள் குறித்து நீதவான் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளார்.

அத்துடன் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைகள் தன்னால் அனுப்பப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான பின்னணியில் பொலிஸார் இந்த வழக்கை மீளக் கைவாங்க வேண்டும் என்று நாங்கள் எங்கள் சமர்ப்பணத்தை முன்வைத்திருந்தோம். அப்படி பொலிஸாரினால் மீளப்பெற முடியுமா என நீதவான் பொலிஸாரிடம் வினவிய போது மேலிடத்தின் அறிவுறுத்தலின்படியே இதனை மீளப்பெற முடியும் என்று பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டது.

பிரதிவாதிகளின் சமர்ப்பணங்களுக்கு செவிமடுத்த நீதவான் இந்த வழக்கை முற்றாக இடைநிறுத்தி கட்டளை பிறப்பித்திருக்கின்றார். இவ்வழக்கு இனி எத்திகதியிலும் நீதிமன்றத்திற்கு வரமாட்டாது என்று தெரிவித்தார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US