நுவரெலியாவில் விசேட தேவையுடையவர்களுக்கு செயற்கை கால் வழங்கி வைப்பு
நுவரெலியா(Nuwara Eliya) மாவட்டத்திற்கு உட்பட்ட விசேட தேவையுடையவர்களுக்கு செயற்கை கால் மற்றும் ஏனைய உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம்(27.06.2024) நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தலைமையில் நடைபெற்றுள்ளது.
சிவில் சமூக அமைப்புகள்
நுவரெலியா கெலேகால சுவசக்தி விசேட தேவையுடையவர்ககள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி சிவில் சமூக அமைப்புகளின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது முப்பது பயனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் சிவில் சமூக அமைப்பினர், பொது வைத்திய சாலையின் வைத்தியர்கள் நலன் விரும்பிகள் என பல்வேறு பட்ட நபர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |