கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் சேவைகள்
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் "மறுமலச்சி நகரம் என்ற தொனிப்பொருளில் உள்ளூராட்சி வாரம் நேற்று முதல் 21ஆம் திகதி வரை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இன்றைய முதல் நாள் நடமாடும் சேவை தினமாக பிரகடனப்படுத்தப்படுகின்ற நிலையில் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பாரதிபுரம் வட்டாரத்தை மையப்படுத்தி இன்றைய வாரத்தின் முதல் நாளான நேற்று நடமாடும் சேவைகள், மின்ணினைப்பு,வீதி புனரமைப்பு, ஆதனவரி உள்ளிட்ட சேவைகளை மக்களுக்கு வழங்கியிருந்தனர்.
நாடுபூராகவும் உள்ள 341உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய குறித்த வாரத்தில் சுற்றாடல் மற்றும் மரம்நடுகை , சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய ,வருமான ஊக்குவிப்பு, இலக்கியம் மற்றும் கல்வி நூலகம், பொது மக்கள் பயன்பாடு மற்றும் விளையாட்டு போன்ற விடயங்களை உள்ளடக்கிய வாரம் செயற்படுத்தப்படவுள்ளது. கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதனின் குரல் பதிவும் உள்ளது.







