இலங்கையின் வருமானம் தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனை
இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையில், குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றும் யோசனை நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
உலக வங்கி உட்பட சர்வதேச வங்களிடம் நிவாரண நிதியை பெற எடுக்கப்பட்ட நடவடிக்கை
உலக வங்கி, சர்வதேச அபிவிருத்தி வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து நிவாரண நிதியை பெறும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக விபரமான காரணங்களை அமைச்சரவையில் முன்வைத்த பின்னர், அது குறித்து உலக வங்கிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக கடந்த 2017 ஆம் ஆண்டு பெயரிடப்பட்டது.
குறைந்த வரும் பெறும் நாடு என்பது நாட்டுக்கு அவமதிப்பு அல்ல
நாட்டின் தற்போதைய நிலைமையில் அதனால், பயனில்லை.
அத்துடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச மறுசீரமைப்பு வங்கி ஆகியவற்றிடம் கடன்களை பெற்றுக்கொள்ளும் போது குறைந்த வருமானம் பெறும் நாடாக பெயரிடப்பட்டிருந்தால், குறைந்த வட்டியில் கடன்களை பெற்றுக்கொள்ள தகுதியை பெற முடியும்.
நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையில் இருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக பெயரிடுவது நாட்டுக்கு அவமதிப்பு ஏற்படாது. அது இந்த சந்தர்ப்பத்தில் எடுக்க வேண்டிய நிதி தொடர்பான நடவடிக்கை எனவும் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இலங்கையை தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றி, எதிர்கால கடன்களை எளிதாக்கும் வகையில் இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்படவுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போதைய நிலையில் அவ்வாறான நிலையை தொடர்ந்தும் பேணிக் கொள்ள முயன்றால் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பவற்றிடமிருந்து குறைந்த வட்டி வீதத்தில் கடன்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போகும்.
தற்போதைய கடன் நிலுவைத் தொகையை மறுசீரமைத்துக் கொண்டு குறைந்த வட்டியில் சர்வதேச கடன்களைப் பெற்று நாட்டை கட்டியெழுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இலங்கை தற்போது குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்கப்படவுள்ளது.
முதலாம் இணைப்பு - அனதி