புதிய மின்சார கட்டண உயர்வு யோசனை அரசாங்கத்துக்கு அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) எதிப்பை புறக்கணித்து புதிய மின்சார கட்டண உயர்வு யோசனையை அரசாங்கம் ஜனவரி மாதத்திற்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் ஒரு அலகு சராசரி விற்பனை விலையை 42 ரூபாவாக நிர்ணயித்து, அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடைசியாக கடந்த ஆகஸ்டில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
கட்டண உயர்வு
இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை மின்சார சபை (CEB) தனது வருவாயை 800 மில்லியனாக அதிகரிக்கும் நோக்கில் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரப்பட்டது.
இந்தநிலையில் அடுத்த வருடம் ஏற்படக்கூடிய வரட்சி நிலைமைகள் காரணமாக மின்வெட்டு
ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து, மின்சாரசபையின் பொறியியலாளர்கள்
விடுத்த எச்சரிக்கையை கவனத்திற் கொண்டு, புதிய கட்டண உயர்வு
மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
