கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரச உடமையாக்க கோரிக்கை
கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களின் சொத்துக்களை அரச உடமையாக்குமாறு கடற்றொழில் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்தோடு, இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு காரணமான அரச அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் மீது உடடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டு -அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் உடைமைகளையும், வாழ்வாதாரத்தையும் கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்களிடம் இருந்து பாதுகாப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (19) மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் நடைபெற்றபோதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
இதன்போது, ஆழ்கடலில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பணி மந்தகதியில் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினரும் இந்த ஈனச்செயலுக்கு உடந்தையாக இருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்த கடற்றொழிலாளர்கள் உடனாக இந்த பிரச்சினைக்கு தீர்வை கோரினர்.
அத்தோடு, தேத்தாதீவு பிரதேசத்தை சேர்ந்த சௌந்தர்ரராஜன் சின்னதம்பி தலைமையில் கடற்கொள்ளையர்கள் செயற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் கடற்றொழிலாளருக்கு விளங்கப்படுத்தி தீர்வை பெற்றுத் தருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
