அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது : அமைச்சர் ஜானக - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நிர்மாணிக்கப்பட்டு வரும் 162 பாலங்களின் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளோம். 16ஆயிரம் மில்லியன் செலவில் 162 பாலங்கள் நிர்மாணிக்கப்படும் என்று கூறினோம். அந்தப் பாலங்களில் ஒரு பகுதியை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னதாக பொதுமக்களிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்.
இதன்படி 162 பாலங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்படும் என கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |