ஜனாதிபதியுடன் இணையப்போகும் சஜித் அணியின் முக்கிய அரசியல்வாதிகள்
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் தரப்பில் ஊகங்கள் நிலவுகின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremsinghe) வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கத்திற்குள் அமைச்சர் பதவிகள் மறுசீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சரவை
இது, முக்கியமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தயாரிப்பில் ஆளும் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக நம்பப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஜனாதிபதி விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாக தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
எனினும் இவர்கள் அமைச்சரவைக்குள் உள்ளடக்கப்படுவார்களா என்பதில் இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை.
பெரும்பாலும் இவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்க்க எதிர்பார்க்கும் உத்தியோகபூர்வ விழா இந்த வார இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 23 நிமிடங்கள் முன்
காரை நிறுத்தச்சொல்லி இறங்கி குதித்துவிட்டார்.. தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! கதறும் குடுபத்தினர் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri