பாரிய மோசடிகளை அம்பலப்படுத்திய முக்கிஸ்தர் வெளிநாடு செல்ல தடை?
பாரிய மோசடிகள் தொடர்பில் அம்பலப்படுத்திய நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன வெளிநாடு செல்ல முயற்சித்த போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
வியாபார நோக்கமொன்றிற்காக தாம் அமெரிக்காவிற்கு பயணம் செய்ய கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற போது தம்மை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
வழக்கு ஒன்றுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் இதனால் நாட்டை விட்டு வெளியேற முடியாது எனவும் குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் தம்மிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
சாதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரியளவிலான வெள்ளைப்பூண்டு மோசடி மற்றும் எரிவாயு சேர்மானம் தொடர்பிலான சர்ச்சை போன்ற பல்வேறு விடயங்களில் துசான் குணவர்தன அம்பலப்படுத்தியிருந்தார்.
வெலிசற நீதிமன்றில் தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில் அதிகாரிகள் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் தமக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்வித அறிவிப்பும் இதுவரையில் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் அம்பலப்படுத்திய தம்மை அந்த வழக்கின் ஓர் சந்தேக நபராக அறிவித்துள்ள பொலிஸார் தமக்கு வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தமக்கு வெளிநாடு செல்ல தடை ஏற்படுத்திய அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராகவும் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துசான் குணவர்தன தெரிவித்துளார்.
விடுதலைப் புலிகளின் தற்போதைய ஆயுதம் என்ன? - இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தகவல் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
