மன்னாரில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு விளக்கமறியல்
மன்னார் (Mannar) - நானாட்டான் பிரதேச சபையின் பிரபல வர்த்தகர் ஒருவரை இலுப்பைகடவை பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில் குறித்த நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வருடம் மணல் அகழ்வு தொடர்பான முரண்பாடு ஒன்றில் ஆத்திமோட்டை விவசாய
அமைப்பின் தலைவரும் தமிழரசு கட்சியின் பிரதேச சபை வேட்பாளருமான நபர் ஒருவரை
தாக்கி காயப்படுத்திய நிலையில் குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கில் நீண்ட நாட்களாக வாக்குமூலம் வழங்க குறித்த வர்த்தகரை இலுப்பைகடவை பொலிஸார் அழைத்த நிலையில் நீண்ட நாட்கள் வாக்குமூலம் வழங்காத நிலையில் நீதிமன்றத்திலும் முன்னிலையாகமால் இருந்துள்ளார்.
வழக்கு தாக்கல்
இந்தநிலையில், கடந்த மாதம் நீதிமன்றத்தில் குறித்த நபர் முன்னிலையான போது, வாக்குமூலம் உடனடியாக வழங்குமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.
இருப்பினும் வாக்குமூலம் வழங்க வருகை தந்தும் வாக்குமூலம் வழங்காது தப்பித்து சென்றதாக குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06.08.2024) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
