பாட்டலி சம்பிக்க ரணவக்க கிளிநொச்சி விஜயம் (VIDEO)
முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரியை (V. Anandasangaree) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக்கூட்டணியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இருவருக்கிடையில் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளார்.
இதன்போது மக்கள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறிப்பாக பசளை, வீடு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக தருமாறும், பொருத்தமானவர்களிற்கு தகவலை வழங்கி தீர்வு பெற்று தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளிற்கு அமைவாக கிளிநொச்சி சிவபுரம் கிராமத்திற்கு சென்று அப்பகுதி மக்களின் பிரச்சிகைளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது மக்கள் வெள்ள அனர்த்தம் ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தெரிவித்துள்ளனர்.



புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri