2022 ஆண்டு தோட்ட பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல்! (Video)
2022 ஆம் ஆண்டு பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman ) தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது மனித வள நிதியத்தின் முலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள், மற்றும் கடந்த ஆண்டு இடம்பெற்ற அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பெருந்தோட்ட பகுதிகளில் தேயிலை மலைகளில் தொழிலாளர்கள் தொழிலில் ஈடுப்படுபோது இளைப்பாற, உணவு உட்கொள்ள, கழிவறை போன்ற வசதிகளுடன் நிர்மானிக்கபடும் இளைப்பாறு கட்டிடத்தை விரைவாக நேர்த்தியாக விரைவாக முன்னெடுக்குமாறும் அதிகாரிகளிடம் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹட்டன், நுவரெலியா ,பதுளை, கண்டி, காலி, கேகாலை, இரத்திபுரி ஆகிய பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய காரியாலயங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
கடந்த அரசாங்கதால் கட்டபட்ட வீடுகளுற்கான உட்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக பூர்த்தி செய்து மக்களுக்கு கையளிக்குமாறும் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைக்குமாறு இதன்போது அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி பெருந்தோட்ட மனித
வள அபிவிருத்தி நிதியத்தின் பிராந்திய காரியத்தின் அதிகாரிகள், சௌமிய மூர்த்தி
தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பணிப்பாளர் கனேஸ் ஈஸ்வரன் மற்றும் அமைச்சரின்
பிரத்தியோக செயலாளர் மொகமட் காதர் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 17 மணி நேரம் முன்
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam