திருகோணமலையில் இடம்பெற்ற வாழ்வாதார ஊக்குவிப்பு செயற்திட்டம்
திருகோணமலை மூதூர் பள்ளிக்குடியிருப்பு பாட்டாளிபுரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு செயற்திட்டம் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் போராளி குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை ஊக்குவிக்கும் முகமாக பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ஒன்றியத்தினால் புலம்பெயர் உறவுகளிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளின் மூலம் உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பயனாளிகள்
குறிப்பிட்ட பிரதேசத்தில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகள் பத்து குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் கந்தசாமி இன்பராசா, ஊடகப் பேச்சாளர் சுப்பிரமணியம் பாலகிருஸ்ணன் உள்ளிட்ட ஒன்றியத்தின் பிரமுகர்கள், பயனாளிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.