மட்டக்களப்பில் சஜித் அணியினரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம்
மட்டக்களப்பு (Batticaloa) மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 20 இலட்சம் உறுப்பினர்களை அங்கத்தவர்களாக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வேலைத்திட்டமானது மண்முனை வடக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) பிரதான அமைப்பாளர் நவரத்தினராஜா ரகுநாதன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் அலுவலகத்தில் இன்று (15.06.2024) நடைபெற்றுள்ளது.
கையேடுகள் வழங்கி வைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கட்சியின் மாவட்ட முகாமையாளர் கணபதி பிள்ளை ஸ்ரீஷ்குமார் மற்றும் மாவட்ட பிரசார செயலாளர் வெற்றிவேல் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டு தமது கட்சியின் ஆதரவாளர்களுக்கு அங்கத்துவ படிவத்தை வழங்கி வைத்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்களது சுய விவரங்கள் பதியப்பட்டு கட்சியின் அங்கத்துவ அட்டை வழங்கி வைக்கப்பட்டதுடன் எதிர்கால செயல் திட்டங்கள் சம்பந்தமான கையேடுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam