திருமண வைபவங்களுக்கு மதுபானம் விற்க தடை - மீறினால் சட்ட நடவடிக்கை
புதிய சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய திருமண வைபவங்களை நடத்தும் தினத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான கபில குமாரசிங்க (Kapila Kumarasinghe) தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய நவம்பர் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை திருமண வைபவங்களுக்கு மதுபானங்களை விநியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமண வைபவங்கள் நடைபெறும் இடத்தில் மதுபானத்தை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸ் அதிகாரிகளுக்கே இருப்பதாக கபில குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
