வட்டுக்கோட்டையிலும் நால்வருக்கு நீதிமன்றினால் தடை உத்தரவு
வட்டுகோட்டையில் நால்வருக்கு மாவீரர் தின நிகழ்வினை நடாத்துவதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வினை நடாத்துவதற்கான தடை உத்தரவானது நீதிமன்றங்களினால் பல்வேறு தரப்பினருக்கும் விதிக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மாவீரர் நினைவேந்தலை நடாத்துவதற்கு, மல்லாகம் நீதிமன்றினால், வட்டுக்கோட்டையில் நால்வருக்கு தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடை உத்தரவானது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் (Easwarapatham Saravanapavan), முன்னாள் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் (Anandi Sasitharan), வலி. மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் மற்றும் வலி. மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பொன்ராசா ஆகியோருக்கு, மல்லாகம் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
