மாவீரர் நாளினை அனுஸ்டிக்க பல்வேறு நீதிமன்றங்களினால் தடை உத்தரவு (PHOTOS)
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாவீரர் வாரத்தை அல்லது மாவீரர் நிகழ்வினை அனுஸ்டிப்பதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் ஊடாக பொலிஸார் இன்று தடை உத்தரவினை பெற்றுள்ளனர்.
குறித்த தடை உத்தரவானது 12 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ளது.
அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்தரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், சமூக செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சமூக செயற்பாட்டாளர் வி.விக்னேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதியில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மாங்குளம் நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான்,புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் மாவீரர் நாளினை நினைவு கொள்வதற்கு 16 பேருக்கான தடை உத்தரவினை புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் பெற்றுள்ளது.
அந்தவகையில்,இன்று மாங்குளம் நீதவான் நீதிமன்றில் இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய எல்லைக்குள் மற்றும் ஒட்டுசுட்டான் பொலிஸ் எல்லைக்குள் பெயர் குறிப்பிட்ட நபர்கள் மாவீரர்களை நினைவு கொள்வதற்கான தடை உத்தரவினை கோரி பொலிஸாரால் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
எதிர்வரும் 20.11.21 தொடக்கம் 30.11.21 வரை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவீரர்களை நினைவிற்கொள்ள தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்
கணபதிப்பிள்ளை விஜயகுமார், தவராசா கணேஸ்வரன், சபாரத்தினம் யோகநாதன், ஜேசுதாசன் பெற்றிக்யூட் ,வேலுப்பிள்ளை தியாகராசா, ஆண்டிஜயா புவனேஸ்வரன், க.ஜெனமேஜெயந்,சி.குகநேசன், சி.சிவமோகன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தம்பையா யோகேஸ்வரன், அன்ரன் ஜீவராசா ,மரியசுரேஸ் ஈஸ்வரி
பேதுறுப்பிள்ளை ஜெராட்
ஆகியோர்
ஒட்டுசுட்டான்
இராமலிங்கம் சத்தியசீலன்
தர்மலிங்கம், ஜீவரெத்தினம்
தப்பையா ,யோகேஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட தடை உத்தரவினை விரைவில் உரியவர்களின் கைகளில் ஒப்படைக்கும் நடவடிக்கையில்
புதுக்குடியிருப்பு,ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.








உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan
