வாகன இறக்குமதி தொடர்பில் நிதியமைச்சர் பசில் வெளியிட்டுள்ள அறிவித்தல்!
2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்தாண்டு அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பு இடம்பெறாது எனவும் அவர் கூறியுள்ளார் .
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
2020ம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் இலங்கையில் கோவிட் தொற்று பரவியதை தொடர்ந்து, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனால் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் நிலை வாகனங்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து வாகன இறக்குமதிக்கு அரசிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, 2022ஆம் ஆண்டிலும் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam