நாளை நள்ளிரவுடன் பிரசார பணிகளுக்கு தடை
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு நாளை நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் நாளை நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாருக்கு அதிகாரம்
அதேவேளை , பொது அல்லது தனியார் வாகனங்களில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுபிரசுரங்கள் போன்றவற்றை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், 21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

நயன்தாராவுடன் தனது முதல் படத்தில் நடித்துள்ள மகாநதி சீரியல் நடிகர்.. அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
