அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளை செய்ய தடை
இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசசார்பற்ற நிறுவனங்களும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெற அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதை அரசாங்கம் உடனடியாக நிறுத்தியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சவுதி அரேபியா, கட்டார், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து மில்லியன் கணக்கான டொலர்கள் இலங்கையில் உள்ள அடிப்படைவாத அமைப்புகளுக்குக் கிடைத்துள்ளது என்பது தெரியவந்ததை அடுத்தே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த நிதி தொடர்பாகவும் அது சம்பந்தமான எவ்வித அறிக்கைகளையும் அரசாங்கத்தில் சமர்ப்பிக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.
11 தமிழ் பிரிவினைவாத அமைப்புகள் மற்றும் 32 இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்திற்குத் தெரியவந்துள்ளதாகச் சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
