வவுனியாவில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் - செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு
இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், தமிழ் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை பகுதியில் நேற்றைய தினம் சிங்கள மக்களுக்கு காணி வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam