மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை(Photos)
மட்டக்களப்பு-ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயாளர்களை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக்கின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் இன்று(23.01.2023) ஓட்டமாவடி 208/பி கிராம சேவகர் பிரிவில் கடந்த இரண்டு வாரங்களில் மூன்று டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக எச்சரிக்கை
இதனையடுத்து அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர் யூ.எல்.எம்.ஜின்னாவின் தலைமையில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களை பார்வையிட்டு அதனை அகற்றியதுடன் பொது மக்களுக்கு டெங்கின் தாக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதன்போது 134 வீடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன் அதில் 05 வீட்டு உரிமையாளர்களுக்கெதிராக எச்சரிக்கையும் விடப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
வீடுகளை பரிசோதிக்கும் வேலைத்திட்டத்தில் ஓட்டமாவடி 208/பி கிராம சேவகர் பிரிவின் சனசமுக நிலைய அங்கத்தவர்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam