வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வழிநடத்த விசேட வேலைத்திட்டம்
வடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்களை வழிநடத்தும் வகையில் விசேட நிகழ்ச்சித் தொடர்களை தயாரிக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டமானது வடக்கு மாகாணத்தின் இளம் குற்றவாளிகளின் குற்றங்களை நிறுத்துவதற்காக செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டமானது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் பூரண மேற்பார்வையின் கீழ், வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களை தெரிவு செய்து அவர்களின் விசேட திறமைகளை இனங்கண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த அணிகளை தெரிவு செய்யுமாறு யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதேச உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
