ஐ.தே.கட்சியில் இணைவோர் தொடர்பில் வேலைத்திட்டம்
விரும்பி ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து தமது அரசியல் எதிர்காலத்தை முன்னெடுக்க விரும்பும் பொதுஜன பெரமுன உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களை கட்சியில் இணைத்துக்கொள்ளுமாறு அந்த கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க, கட்சியின் பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் அது சம்பந்தமாக வேலைத்திட்டத்தை உருவாக்குமாறும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சியின் பிரதானிகளுடனான பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட சில பிரதான கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.