நேபாளத்தில் ஏற்பட்ட நிலைமை இலங்கையிலும் ஏற்படலாம்
அண்மையில்ல நேபாளத்தில் இடம்பெற்ற வன்முறை போராட்டங்கள் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைகள் போன்றன இலங்கையிலும் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி இந்த எச்சரிக்கயை விடுத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இதுவரை ஆட்சி செய்த அரசாங்கங்களில் மிகவும் அனுபவமற்ற அரசாங்கம் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நவீன ஆட்சி வரலாற்றில் இலக்கையில் மிகவும் அனுபவம் இல்லாமல் ஆட்சி செய்யும் அரசாங்கமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை அடையாளப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நேபாளத்தில் இளைஞர் கிளர்ச்சியை ஏற்பட்டு அங்கு ஆட்சி செய்த இடதுசாரி அரசாங்கத்தை விரட்டி அடித்ததாகவும் இடதுசாரி அரசாங்கம் ஒன்று விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் இலங்கையிலும் அவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான ஒரு நிலைமையை ஏற்படுத்துவதா அல்லது தவிர்ப்பதா என்பதை தற்போதைய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தனது சமூக ஊடக கணக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டதன் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடும் ஆதரவினை வெளிப்படுத்தி வந்த பேராசிரியர் தெவ்சிறி அண்மைக்காலமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.




