வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் நான்கு நிலையங்களில் ஆரம்பம்
வவுனியாவில் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு நடவடிக்கை நான்கு இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் நெல்லினை உத்தரவாத விலையில் கொள்வனவு செய்து அரிசியைக் கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக நெல் கட்டுப்பாட்டுச் சபையால் சிறுபோக நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பூங்கா வீதி, மாமடு, நெடுங்கேணி, வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நெல் களஞ்சிய சாலைகளில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு கிலோகிராம் நாடு 50 ரூபாய்க்கும், சம்பா 52 ரூபாய்க்கும், கீரி சம்பா 55 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படுவதுடன் போக்குவரத்து கூலியாகக் கிலோகிராம் ஒன்றுக்கு 1.50 சதம் வழங்கப்படுகின்றது.
எனவே, விவசாயிகள் உலர்ந்த நெல்லை அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல் களஞ்சியசாலைகளில் விற்பனை செய்ய முடியும் என நெல் கட்டுப்பாட்டுச் சபையினர் தெரிவித்துள்ளனர்.




துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri