மட்டக்களப்பு மாவட்டத்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் சினோபாம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஏற்றும் நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தாக்கம் அதிகமாகவுள்ள பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் இன்று காலை மட்டக்களப்பு கூழாவடி விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 18881 பேருக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.








