போரதீவுப்பற்று பிரதேசத்தில் கோவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் சினோபாம் கோவிட் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக கோவிட் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
வெல்லாவெளி மகா வித்தியாலயம் மற்றும் திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
வெல்லாவெளி மகா வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சிமன்ற
ஊழியர்கள்,பொலிஸார் ஆகியோருக்கு தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன .







பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
