மன்னாரில் இறுதிக்கட்ட பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு
மன்னார் மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று(17) காலை முதல் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு 2வது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் கடந்த மாதம் முதலாவது பைஸர் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட கர்ப்பிணி தாய்மாருக்கும் இன்றையதினம் இரண்டாவது பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
