பழங்கள் - காய்கறி ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்: அரசாங்கம் தீவிர நடவடிக்கை
இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான ஏற்றுமதி செயற்பாடு ஆபத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) ஏற்றுமதி செய்யப்படும் சில காய்கறி மற்றும் பழப் பொதிகளில் அபாயகரமான இரசாயன எச்சங்கள் இருப்பதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைத் தொடர்ந்து, நாட்டின் ஏற்றுமதித்துறை கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதன் விளைவாக, ஐரோப்பிய சந்தைக்கு இலங்கையின் விவசாய ஏற்றுமதிகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
புதிய ஏற்றுமதி நடைமுறை
இதன்படி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளும் இலங்கை சிறந்த விவசாய நடைமுறைகள் (SL-GAP) வழிகாட்டுதல்களின் கீழ் பயிரிடப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, சான்றுப்படுத்தப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கமத்தொழில், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்தவினால் முன்வைக்கப்பட்ட இந்த அவசர முன்மொழிவின்படி, இனி பதிவுசெய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பொதியிடல் மையங்கள் மூலமாக மட்டுமே ஏற்றுமதிகளை மேற்கொள்ள முடியும்.
இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட சில விவசாயப் பொருட்களில் அதிகபட்ச எச்ச வரம்புகளை (ஆசுடுள) மீறுமு; வகையில் இரசாயன எச்சங்கள் உள்ளடங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இது நுகர்வோர் ஆரோக்கியத்திற்கு ஒரு கடுமையான அபாயமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் விதிகளை மீறினால் இலங்கை முழுமையான சந்தைத் தடை அல்லது கடுமையான ஆய்வுகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
நாட்டுக்கான வருவாய் அதிகரிப்பு
நாட்டின் மொத்த சரக்கு ஏற்றுமதியில் கால் பங்கிற்கும் மேலானவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கே செல்கின்றன. பொருளாதாரத் தரவுகளின்படி, ஏப்ரல் 2026ல் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வருவாய் 5ஆக அதிகரித்து 224.42 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் கிட்டத்தட்ட 1 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. இதில் 27.5 மில்லியன் டொலர் பழங்கள் மற்றும் காய்கறி ஏற்றுமதி மூலம் ஈட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், புதிய SL-GAP சான்றிதழ் மற்றும் கடுமையான ஆய்வுகூடப் பரிசோதனைகள் ஏற்றுமதியாளர்களின் செயல்பாட்டுச் செலவுகளை அதிகரிக்கக்கூடும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புதிய ஐரோப்பிய ஒன்றிய விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு அரசாங்கம் அவசரமாக தொழில்நுட்ப அறிவையும் தேவையான வளங்களையும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
தொடரும் கபில சந்திரசேனவின் மரண விசாரணை..! அரவிந்த டி சில்வாவின் மனைவி மூலம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan