உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்! கடற்தொழிலாளர்களின் அவசர கோரிக்கை
வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் உடனடி நிரந்தர தீர்வுகள் எடுக்கப்பட வேண்டுமென வட மாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் இணையத்தின் பிரதிநிதிகளான அன்னலிங்கம், அன்னராசா, நாகராசா மற்றும் வர்ணகுலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரச்சினைகள் தொடர்பில் விரிவான விளக்கம்
இதன்போது அவர்கள், குறிப்பாக கடலட்டைத் தொழில் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மேற்கொள்ளும் மீன்பிடி நடவடிக்கைகளால் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பாதிப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில் முறைகளால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
மேலும், வட மாகாண கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி மற்றும் நிரந்தரமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.