கோவிட் தடுப்பூசியால் ஏற்படும் பாலியல் பிரச்சினைகள்
கோவிட் தடுப்பூசி ஆண்மைக் குறைவை ஏற்படுத்துவதற்கான விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இல்லை என மருத்துவர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சில பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம் என்றாலும், கோவிட் தடுப்பூசியால் ஆண்மைக்குறைப்பாடு பிரச்சினைகள் தொடர்பில் ஆதாரமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பாலியல் செயற்பாடு மற்றும் குழந்தையின்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க கோவிட் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உட்பட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது, எனவே அதைப் பெறுவது பற்றி கவலைப்படத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.