இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - மின்சார விநியோகத்தில் சிக்கல்
அடுத்து வரும் வாரங்களில் நாட்டில் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தாததன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மின் நெருக்கடியை தவிர்ப்பதற்காக மின் பொறியியலாளர்களால் முன்வைக்கப்பட்ட குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்த மின்சார நெருக்கடிக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் 100 மெகாவாட் காற்றாலை அமைக்க திட்டமிடப்பட்டு, 2017ஆம் ஆண்டு முதல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கெரவலப்பிட்டியவில் 350 மெகாவாட் காற்றாலை நிர்மாணப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் சகல செயற்பாடுகளும் நிறைவடைந்து 150 மெகாவாட் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைப்பதற்கான காணியை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கான காணி தொடர்பான தகவல்கள் துறைசார் அமைச்சரின் ஒப்புதலுக்காக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் அது இன்னும் அமைச்சரின் கைகளிலேயே உள்ளது.
இந்த பிரச்சினைகளுடன் நாட்டில் கச்சா எண்ணெய் இல்லாமையினால் எதிர்காலத்தில் எரிபொருள் மின் நிலையங்கள் நிறுத்தப்படும். இந்த மின்சார நெருக்கடி ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



