இஷாரா செவ்வந்தி நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற செய்தியை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு சிக்கல்
கணேமுல்லை சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் பரபரப்புச் செய்தியொன்றை வெளியிட்ட இரண்டு ஊடகவியலாளர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை வழங்குமாறு குறித்த இரண்டு ஊடகவியலாளர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தி தென்னிலங்கையின் கடற்பரப்பின் வழியாக நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக அண்மையில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
பொலிஸாரின் தேடுதல்
குறித்த செய்தி தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் , அது தொடர்பில் செய்தியை எழுதியுள்ள ஊடகவியலாளர்களிடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள நீதிமன்ற உத்தரவை கோரி, மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நீதிமன்றத்திற்குள் கடத்தி வந்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டவருக்கு வழங்கியதாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தியைக் கைது செய்வதற்கான தேடுதல் இன்னும் நடைபெற்று வருகிறது.
பெப்ரவரியில் கொழும்பு நீதிமன்றத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக துப்பாக்கிதாரி உட்பட பல சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இஷாரா செவ்வந்தி தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் இன்றி பொலிஸாரின் தேடுதல் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
