66 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
மேற்கு ஆபிரிக்க நாடான கம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக கூறப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகள், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மருந்துகளை இறக்குமதி செய்யும் போது கவனமாக ஒழுங்குபடுத்தும் முகவர் நிலையங்கள் நடைமுறையில் இருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருந்து நன்கொடைகள் பரிசோதனை
இதற்கிடையில், சுகாதார அமைச்சகம் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் மருந்து விநியோகப் பிரிவு ஆகியவற்றிலும் இந்த விடயம் குறித்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளினால் பெறப்பட்ட மருந்து நன்கொடைகளும் பரிசோதிக்கப்பட்டன. எனினும் இலங்கையில் குறித்த மருந்துக்கள் கிடைக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு முன்னதாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளின்
தயாரிப்புகளால் கம்பியாவில் 66 குழந்தை இறப்புகள் ஏற்பட்டதாக வெளியான தகவல்
தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri