பாகிஸ்தானில் கொடூர கொலைக்கு இலக்கான பிரியந்த! சந்தேக நபர்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் படுகொலை வழக்கில் கைதான 85 பேருக்கான விளக்கமறியல் உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சியல்கோட் தொழிற்சாலை முகாமையாளரான இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் படுகொலையுடன் தொடர்புடைய 85 பேரையும் ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குஜ்ரன்வல பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் தொழிற்சாலையின் தொழிலாளர்கள் உட்பட அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கானவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டும் உள்ளது.
மதம் சார்ந்த உள்ளடக்கம் கொண்ட சுவரொட்டியை அகற்றியதற்காக பிரியந்த குமார மீது அவதூறு குற்றம் சாட்டப்பட்டு, கடந்த டிசம்பர் தொடக்கம் சியால்கோட்டில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டு பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
எனினும் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் குமார மீது அவதூறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமை பின்னர் தெரியவந்தது.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 4 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam
