மின்சார சபையை தனியார் மயமாக்க அரசு நடவடிக்கை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபை தனியார் மயமாக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மின்சாரத்துறையை தனியார் மயமாக்குவது இடம்பெறும் ஊழல் மோசடிகளுக்கு தீர்வாக அமையப்போவதில்லை என்றும் ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
பாரியளவில் மாபியாக்கள்
மின்சாரத்துறை மறுசீரமைப்பு செய்வதை வரவேற்கிறோம். ஆனால் மறுசீரமைப்பு என்ற பெயரில் அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியார்மயமாக்கல் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. மின்சாரத்துறையில் தற்போதும் பாரியளவில் மாபியாக்கள் இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் வலுசக்தி நாட்டுக்கு மிகவும் அவசியமானதாகும். அதனால் நல்ல சேவை ஒன்றை வழங்குவதற்காக இந்த துறைகளில் மறுசீரமைப்பு மேற்கொள்வது அவசியமானதாகும் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
