இலங்கையை தொடர்ந்தும் விரட்டும் தனியார் பத்திரப்பதிவுதாரர்கள் : வெளியாகியுள்ள தகவல்
தனியார் பத்திரப்பதிவுதாரர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை என பொருளாதார ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நாட்டின் மொத்த கடனில் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த தனியார் பத்திரக்காரர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
16 ஏப்ரல் 2024 அன்று, இலங்கை அரசாங்கம், தனியார் பத்திரதாரர்களுடனான நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று அறிவித்திருந்தது.
அரசாங்கத்தின் முன்மொழிவுகள்
இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பைப் பார்க்கும்போது, தனியார் பத்திரதாரர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாக உணரலாம்.
எனினும், தனியார் பத்திரதாரர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை.
மேலும், வணிகக் கடன்களுக்கான சராசரி வட்டி விகிதங்கள் சுமார் 5 - 6 சதவீதமாக உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை சராசரியாக 5.3 வீதத்தால் வளர்ச்சியடைந்தால் 9.75 சதவீத வட்டி வீதத்தை இலங்கை செலுத்த வேண்டும்.
எனினும், இதனை 9 சதவீதமாக உயர்த்த அரசு ஒப்புக் கொண்டுள்ளதால் இங்கு பாரிய வித்தியாசங்கள் இல்லை.
இருந்தபோதும், 2024 முதல் 2028 வரை சராசரி வளர்ச்சி விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் போது, இலங்கை தனியார் பத்திரதாரர்களுக்கு 9 சதவீத வட்டிக்கு மேல் செலுத்த வேண்டும் என்றால், வட்டி விகிதம் வளர்ச்சி விகிதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம்.
தியத்தலாவ கார் பந்தய இறப்புக்களுக்கு அதிகாரிகளே பொறுப்பு: குற்றம் சாட்டியுள்ள பந்தய கார் ஓட்டுநர்கள்
கடன்களுக்கான வட்டி
எனவே, பத்திரப்பதிவுதாரர்கள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவுகள் அடிப்படை பொருளாதாரக் கோட்பாடுகளை மீறுவதாகும்.
ஆனாலும், அரசாங்கம் பேரம் பேசுகிறது என்பதை மக்களுக்கு காட்ட விரும்புகிறது .
அதேவேளை, தனியார் கடனாளிகளிடமிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஐந்து வருட காலப்பகுதியை இலங்கை பெற்றுக்கொள்ளலாம்.
எவ்வாறாயினும், இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கியவுடன், கடன்களுக்கான வட்டியாக 1.3 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியிருக்கும்.
இதனையே, வட்டியின் மேல் வட்டி என்கிறோம். எனவே, தனியார் பங்குபத்திரகாரர்கள் எங்களை விரட்டி அடிக்கிறார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |