இரசாயன பசளைகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி : ஜனாதிபதி ஆலோசனை
பசுமை விவசாயம் என்பது தொடர்ந்தும் அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் எனவும் காய்கறி, தானியங்கள், சோளம் போன்ற பயிர்களுக்கு தேவையான இரசாயன பசளைகளை தேவைக்கு ஏற்ற வகையில் இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
பசளை மற்றும் விவசாய இரசாயன பசளை சம்பந்தமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக அனைத்து தரப்பினரையும் அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான இந்த பேச்சுவார்த்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எவ்வாறாயினும் பசுமை விவசாயம் அரசாங்கத்தின் கொள்கை எனவும் இரசாயன பசளைகள் எந்த வகையிலும் அரசாங்கத்தின் மானிய திட்டங்களின் கீழ் வழங்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 18 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
