இலங்கையில் “டீசல்” நெருக்கடி-தனியார் பேருந்துகளுக்கு அரச சாலையில் இருந்து டீசல்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாலைகளில்(டிப்போ) இருந்து தேவையான டீசலை பெற்றுக்கொள்ள தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள 45 இலங்கை போக்குவரத்து சபை சாலைகளில் தனியார் பேருந்துகளுக்கு டீசல் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டீசல் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டு நிலையை அடுத்தே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு போதியளவு டீசலை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அமுனுகம தெரிவித்தார்.
தனியார் பேருந்துகள் டீசலை பெறுவதற்கு போக்குவரத்து அனுமதிப்பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்தநிலையில் தொலைதூர பேருந்துகளுக்கு 150 லிட்டர் டீசலும் குறுகிய தூர பேருந்துகளுக்கு 100 லிட்டரும் வழங்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.





ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
