மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிய தனியார் பேருந்து
இரண்டு தடவை பணம் செலுத்த வேண்டிய நிலை கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த மக்களிடம் இரு தடவை பணம் அறவிட்டு தனியார் பேருந்து நெருக்கடிக்கு உள்ளாகிய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று முன்தினம் காலை பூநகரியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் பலர் ஏறியுள்ளனர். இதன்போது பூநகரியில் இருந்து வவுனியா செல்வதற்கு 500 ரூபாய் பணம் பேருந்து நடத்துனரால் அறவிடப்பட்டுள்ளது.
குறித்த பேருந்து கிளிநொச்சியை அடைந்த போது 10 பேர் அளவில் மட்டுமே குறித்த பேருந்தில் தொடர்ந்தும் வவுனியா நோக்கி பயணம் செய்ய இருந்தமையால் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் அத் தொகை காணாது எனத் தெரிவித்து குறித்த பேருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரை சென்று, யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்றில் பயணிகளை ஏற்றிவிட்டுனள்ளனர்.
இதன்போது பயணிகள் மிகுதிப் பணத்தை கேட்ட போது அந்த பேருந்திடம் நீங்கள் செலுத்த தேவையில்லை என பூநகரியில் இருந்து வந்த பேருந்து நடத்துனர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பேருந்தில் ஏறி வவுனியா நோக்கி 10 பேர் வரையில் பயணித்த போது இருவரை தவிர, ஏனையவர்களிம் குறித்த பேருந்து நடத்துனர் 347 ரூபாய் வீதம் பணம் அறவிட்டுள்ளார்.
மக்களை நெருக்கடிக்குள்ளாக்காதீர்..
இதன்போது தாம் முன்னரே அந்த பேருந்தில் பணம் செலுத்தி சிட்டை பெற்றுள்ளதாகவும், செலுத்த தேவையில்லை எனக் கூறப்பட்டதாகவும் பயணிகள் கூறிய போது, இல்லை பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்து பணம் அறவிட்டதுடன், அந்தப் பணத்தை அங்கு சென்று கேளுங்கள் எனக் கூறியுள்ளார்.
இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தினமும் வாழ்வாதற்காக போராடும் மக்கள் அவசிய தேவைக்காக பயணம் செய்தமையால் குறித்த பணத்தை செலுத்திவிட்டு பயணத் செய்துள்ளனர்.
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அதன் சங்கங்கள் கவனம்
செலுத்தி பொருளாதார நெருக்கடியால் பதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும்
நெருக்கடிக்குள்ளாக்காது செயற்பட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள்
கோரியுள்ளனர்.