தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி ஒருநாள் சேவைப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (18.05.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் அதிகளவு புகை வெளியேற்றம்
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் இருந்து, அதிகளவு புகை வெளியேறுவது தொடர்பில், மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த சோதனை நடவடிக்கைகள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், ஒருநாள் சேவைப் பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வாகன உதிரிப் பாகங்களுக்கு தட்டுப்பாடு
நாட்டில் உதிரிப் பாகங்கள் இல்லாதமையாலும், அவற்றின் விலை உயர்வு காரணமாகவும், பேருந்துகள் அதிகளவில் புகையினை வெளியிடுவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் தரமற்ற டீசல் விற்பனை செய்யப்படுகின்றது. அவ்வாறு விற்பனை செய்யப்படுவதால், வாகனத்தில் அதிகளவான புகை வெளியேற்றப்படுவதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |