தனியார் பேருந்து சாரதிகள் பணி பகிஷ்கரிப்பு: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை (Video)
வீதிப் போக்குவரத்து பயணிகள் அதிகார சபைக்குட்பட்ட வாழைச்சேனை தனியார் பேருந்து சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இப் பணி பகிஷ்கரிப்பு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
சாரதிகளின் கோரிக்கை
மட்டக்களப்பு மாவட்ட வீதிப் போக்குவரத்து பயணிகள் அதிகார சபையின் காரியாலயத்தில் கடந்த மாதம் 18ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் வாழைச்சேனை தனியார் பேருந்து சாரதிகளால் தங்களுக்கு சுழற்சி முறையில் பேருந்துக்களை பயணம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்த நிலையில் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்குள் சுழற்சி முறையில் பேருந்துக்களை பயணம் செய்ய ஏற்பாடு செய்து தருவதாக மாவட்ட பணிப்பாளர் வாக்குறுதி வழங்கிய நிலையில் இன்றுவரை ஏற்பாடு செய்து வழங்காத காரணத்தினால் வாழைச்சேனை தனியார் பேருந்து சாரதிகள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
பிரச்சினைக்கு தீர்வு
இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை வீதிப் போக்குவரத்து பயணிகள் அதிகார சபையின் பணிப்பாளர் வாழைச்சேனை தனியார் பேருந்து சாரதிகள் தரிப்பு நிலையத்திற்கு வருகை தந்து சாரதிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் 8ஆம் திகதி சுழற்சி முறையில் பேருந்துக்களை பயணம் செய்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.
திருகோணமலை வீதிப்போக்குவரத்து பயணிகள் அதிகார சபையின் பணிப்பாளரின் வாக்குறுதியை தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு தனியார் பேருந்துகள் வழமையான முறையில் பயணம் செய்யப்பட்டதுடன், எதிர்வரும் எட்டாம் திகதி தங்களுக்கான தீர்வுகள் கிடைக்காது விடும் பட்சத்தில் போராட்டம் மீண்டும் போராட்டம் தொடரும் என சாரதிகள் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்துகள் மாத்திரம் காலையில் சேவையில் ஈடுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
