மீண்டும் வடக்கு - கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம்: அருட்தந்தை மா.சத்திவேல்

Northern Provincial Council SL Protest Sri Lankan political crisis Eastern Province
By Kanamirtha May 16, 2022 01:53 PM GMT
Report

அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை அடைவோம் என ஏங்கித் தவிக்கும் நிலையில், மீண்டும் வடக்கு, கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் அத்தோடு சிறைக்குள்ளேயே வன்முறையும் வெடிக்கலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

த ஹிந்து பத்திரிகையின் "மே பதினெட்டில் முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் தாக்குதல் நடத்த உள்ளார்கள்" என்பது அரசியல் சதி மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் இராணுவ கட்டமைப்பை மேலும் பலப்படுத்தவும் அப்பாவி இளைஞர்களைச் சிறைக்குள் தள்ளவும் வழிவகுக்கும்.

மறைந்திருக்கும் மகிந்த ராஜபக்ச வெளியே வருவதற்கும், காலிமுகத்திடலின் "கோட்டா கோ ஹோம்", அலரிமாளிகையின் முன்னால் நடக்கும் "நோ டீல் கம" போராட்டங்கள் நீர்த்துப் போகச் செய்வதற்கான சூழ்ச்சியாகவே கொள்ள வேண்டும்.

மீண்டும் வடக்கு - கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Prisons May Be Filled Again Youth North East

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலிமுகத்திடல் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டுள்ளன.

இந்நிலையில் அரச பயங்கரவாதத்தின் துணையோடு வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட நிலையில், அதுவும் தோல்வியில் முடியவே தற்போது பாதுகாப்பு கருதி தமிழர் பகுதியிலேயே மறைந்து வாழும் நிலையில் அந்த வெட்கத்திலிருந்து மீள்வதற்கு இந்து பத்திரிகை செய்தி துணையாக உள்ளது.

அத்தோடு தமது அரசியல் நலனுக்காகக் கடந்த காலங்களில் இனவாத, மதவாத வன்முறைக்குத் துணை நின்றவர்களின் ஆதரவோடு இனவாதத்தையும், மதவாதத்தையும் மீண்டும் தேசியக்கொடியாக்கியே ஆட்சியில் அமர்ந்தவர்கள் அதனை கைவிடவில்லை.

கடந்த 9ஆம் திகதி அவர்களின் வன்முறை கும்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து நீர்கொழும்பில் கிறிஸ்தவ முஸ்லிம் சமய பிரிவினரை மோத விடுவதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டனர். அதுவும் தோல்வி கண்ட நிலையிலேயே அடுத்த கட்டத்தில் முன்னெடுப்பாக இந்து பத்திரிக்கை செய்தி அமைந்துள்ளது.

2019 தொடர்ந்து பல்வேறு வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்க முயற்சி செய்தவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இந்து பத்திரிகையின் ஊடாக புலி புரளியைக் கிளப்பி அடுத்த இனகலவரத்திற்கும் விடுகிறார்களோ எனவும் சிந்திக்கத் தோன்றுகின்றது.

அரசியல் கைதிகள் தாம் எப்போது விடுதலை அடைவோம் என ஏங்கித் தவிக்கும் நிலையில், மீண்டும் வடக்கு, கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம். அத்தோடு சிறைக்குள்ளேயே வன்முறையும் வெடிக்கலாம்.

மீண்டும் வடக்கு - கிழக்கின் இளைஞர்களால் சிறைகளை நிரப்பும் நிலையும் ஏற்படலாம்: அருட்தந்தை மா.சத்திவேல் | Prisons May Be Filled Again Youth North East

2009 தொடர்ந்து ஆயுதம் மௌனிக்கப்பட்ட நிலையில் சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் சர்வதேச ரீதியில் நீதியின் கதவை தட்டிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் தாயக பிரதேசத்தில் உள்ள புல்ளுருவிக களை அடையாளங்கண்டு அவதானமாகச் செயற்பட வேண்டிய காலம்மிது.

இது மே 18 நினைவேந்தலுக்குப் பின்னரும் தூர நோக்கோடு பயணிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகின்றது. தமிழ் மக்களின் அரசியல் எதிரிகள் பல்வேறு முகங்களோடு விழிப்புடன் இருக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று உணர்வுப் பூர்வமாகச் சுடரேற்றும் அனைவரும் அரசியல் எதிரிகளுக்குத் துணை போகும் அரசியலை முன்னெடுக்கமாட்டோம் எனவும் தியாகச்சுடர் முன் உறுதியேற்க வேண்டும்.

அதுவே அரசியல் எதிரிகளைத் தோல்விக்கான செய்யும். ஒரு இலக்கோடு அரசியல் இலக்கையும் அடைவதற்கும் வழி வகுக்கும்'' இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US