சிறைச்சாலைகளின் மோசமான சுகாதார வசதிகள்: அம்பிகா சற்குணநாதன் விசனம்
சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (23.12.2023) மேலும் 8 கைதிகளுக்கு மூளைக்காய்ச்சால் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மாத்தறை சிறைச்சாலையில் தொற்றுப் பரவல்
மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளால் அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் 8 கைதிகள் அதே நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர்.
சிறைச்சாலைகளின் சுகாதார வசதிகள் மிகவும் மோசமான தரத்தில் இருப்பதாலேயே இந்நோய்த்தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
இதனால் ஏதேனும் நோய்த்தொற்றுப்பரவல் ஏற்படும்போது சிறைக்கைதிகள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகின்றனர்.
பெரும் எண்ணிக்கையான கைதுகள்
மேலும் சிறைச்சாலைகளில் சாதாரணமாக தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கைக்கு அப்பால் கைதுகள், தடுத்து வைப்புக்கள் இடம்பெறும் போது இடநெருக்கடி ஏற்படுகின்றது.இதனால் நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்கின்றன.
அத்தோடு கோவிட் 19 காலப்பகுதியில் கூட கைதிகளினுடைய சுகாதார நலன்கள் பேணப்படாமை, அதன்போது சிறைச்சாலைகளில் நிலவிய குறைபாடுகள் பற்றியும் அம்பிகா சற்குணநாதன் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
